தாலி சென்டிமென்ட்டில் சிக்கிக்கொண்ட நயன்தாரா?

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தொடர்ந்து பல்வேறு படங்களில் பல மொழிகளில் நடித்து வரும் இவர் சில மாதங்களுக்கு முன்னர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா திரையுலகில் இருந்து விலக இருப்பதாகவும் அதற்கு ஒரே ஒரு காரணம்தான் என்றும் கூறப்பட்டு வருவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏட்படுத்தியுள்ளது..

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, நடிகை நயன்தாரா தற்போது இருக்கும் படங்களை முடித்துவிட்டு திரையுலகில் இருந்து விலகப் போவதாகவும் பட தயாரிப்பு பணிகளை மட்டும் கவனிக்க இருப்பதாகவும் அதற்கு ஒரே காரணமாக தாலி சென்டிமென்ட் என்று கூறப்படுகிறது.

நயன்தாராவின் குடும்பத்தினர் எந்த காரணத்தை முன்னிட்டும் படப்பிடிப்பின்போது தாலியை கழட்ட வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளதாகவும் தற்போது அவர் நடித்து வரும் படங்களில் கூட தாலியை கழட்டாமல் தான் நடித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதனால் பல்வேறு கேரக்டரில் நடிக்கும்போது தாலியை கழற்றி வைத்துவிட்டு நடிக்கும் நிலை ஏற்படலாம் என்பதால் திரையுலகில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் அவர் தொடர்ந்து தனது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் பல திரைப்படங்களை தயாரிப்பது என்றும் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Nayanthara