அமலா பாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் அதிரடியாக கைது

நடிகை அமலா பால் திரைத்துறையில் மைனா, தலைவா, வேலையில்லா பட்டதாரி, வேட்டை, முப்பொழுதும் உன் கற்பனைகள், திருட்டு பயலே 2, பாஸ்கர் ஒரு ராஸ்கல், ராட்சசன், ஆடை, காடவர் போன்ற படங்களில் நடித்தவர்.

அமலா பால் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து 2014ல் திருமணம் செய்துகொண்ட நிலையில் சில வருடங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார். அதன் பின் அவர் ஜெய்ப்பூரை சேர்ந்த பவீந்தர் சிங் என்பவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானது. அவர்கள் திருமணம் செய்துகொண்டதாக தகவல் பரவிய நிலையில், அது உண்மை இல்லை. போட்டோஷூட் தான் என விளக்கம் கொடுத்தார் அமலா பால்.

அப்போது இன்ஸ்டாகிராமில் போட்டோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய பவீந்தர் சிங் மீது அமலா பால் தற்போது பாலியல் புகார் அளித்து இருக்கிறார். விழுப்புரம் அருகில் இருக்கும் ஆரோவில் பகுதியில் அமலா பாலுக்கு சொந்தமான வீட்டில் பவீந்தர் சிங் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் லீக் செய்துவிடுவேன் என அவர் மிரட்டுகிறார் என்றும் புகாரில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

அமலா பால் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் பவீந்தர் சிங்கை தற்போது ராஜஸ்தானில் கைது செய்து இருக்கின்றனர்.

amala paul file cace
amala paul file cace