‘தளபதி 67’ படத்தில் இணைந்த இன்னொரு மிரட்டலான சூப்பர் பிரபலம்?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 67’ படத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன் உள்பட 6 முக்கிய வில்லன்கள் நடிக்க இருப்பதாகவும் த்ரிஷா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகிய மூன்று நாயகிகள் நடிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்படும்நிலையில், இன்னொரு சூப்பர் தகவல் வெளிவந்துள்ளது.

அந்த வகையில் தற்போது இந்த படத்தில் கம்பீரமான நாய் ஒன்று முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படமான ‘Palthu Janwar’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நாய் ’தளபதி 67’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஊடகமொன்றுக்கு பேட்டி அளித்த இந்த நாயின் உரிமையாளர் விஜய்யின் படத்தில் இந்த நாய் நடிக்க இருப்பதாகவும் டிசம்பர் மாதம் படப்பிடிப்புக்கு அழைத்து வர படக்குழுவினர் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

adbanner