மீரா மிதுன்னை வலைவீசி தேடும் போலீசார்!

நடிகை மற்றும் பிக் பாஸ் பிரபலம் மீரா மிதுன் பட்டியலினத்தவர்கள் பற்றி தவறாக பேசிய குற்றச்சாட்டுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அதன் பின் அவர் ஜாமினில் வெளியே சென்ற நிலையில் இதுவரை நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதனால் இரண்டாவது முறையாக நீதிமன்றம் மீராவுக்கு ஜாமினில் வர முடியாத வாரண்ட் பிறப்பித்தது.

இந்நிலையில் நேற்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது மீரா மிதுன் மீண்டும் நீதிமன்றும் வரவில்லை. அவர் தலைமறைவாகிவிட்டார் என போலீசார் நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவித்து இருக்கிறார்கள்.

இதனால் வழக்கை செப்டம்பர் 14ம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்து இருக்கிறது. அதற்குள் மீரா மிதுன் எங்கே இருக்கிறார் என்பதை போலீசார் ட்ரேஸ் செய்து கைது செய்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Meera Mitun