விருமன் பட பாடலுக்காக மன்னிப்பு கோரிய பாடலாசிரியர்

கார்த்தி நடித்த ‘விருமன்’ திரைப்படத்திற்கு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதள விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளதை அடுத்து இந்த படம் முதல்நாளில் மிக அபாரமான வசூல் செய்துள்ளதாகவும் இதுவரை வெளியான கார்த்தி படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் ‘விருமன்’ தான் என்றும் கூறப்பட்டது.

முத்தையா இயக்கத்தில் கிராமத்து பின்னணி கதையில் வெளியாகியுள்ள இப்படம் நல்ல வெற்றி என படக்குழு வெற்றிவிழா எல்லாம் கொண்டாடினார்கள்.

இந்நிலையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ”கஞ்சா பூவு” பாடல் சர்ச்சையை உண்டாக்கியிருந்தது. அதில் போதை செடியான கஞ்சாவை உவமையாக பயன்படுத்தியத்துக்காக தற்போது அதன் பாடலாசிரியர் மணிமாறன் மன்னிப்பு கோரியுள்ளார். மேலும் எதிர் காலத்தில் இவ்வாறான தவறுகள் இடம்பெறாமல் இருக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

kanja poo kannala
adbanner