தடாலடியாக சம்பளத்தை உயர்த்திய நடிகை சமந்தா

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நயன் தாரா, விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்திருந்த படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், தற்போது, தெலுங்கு சினிமா மற்றும் வெப் சீரிஸில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், தனுசஷுக்கு ஜோடியாக ‘ஆடுகளம்’ படத்தில் நடித்த டாப்ஸி, தற்போது ஒரு படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி, அதை சைடர்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ளார். இதை தொடர்ந்து அவர் தயாரிக்க இருக்கும் படத்தில் நடிகை சமந்தா நாயகியாக நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், அடுத்தடுத்து வெற்றி பெறும் நடிகை சமந்தா இப்போது தனது சம்பளத்தை உயர்த்தியதாக கூறப்படுகிறது. அதிலும் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா இடம்பெற்ற உ சொல்றியா மாமா பாடலுக்கு பிறகு சமந்தாவிற்கு அதிக ரீச் கிடைத்திருக்கிறது. அதனால் தற்போது அடுத்து நடிக்கப்போகும் படங்களுக்கு ரூ. 3.5 கோடி வரை சம்பளத்தை உயர்த்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

Samantha Ruth Prabhu