தனுஷின் முந்தைய பட வசூல்களை முறியடித்து சாதனை செய்து வரும் திருச்சிற்றம்பலம்

தனுஷ் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் முதல் நாளே கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக திரையரங்குகளுக்கு குடும்பம் குடும்பமாக சென்று படம் பார்த்து வருகின்றனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு குடும்பத்துடன் தியேட்டருக்கு படம் பார்க்க வரும் கூட்டம் அதிகமாக உள்ளது.

‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் முதல் வாரத்தில் 50 கோடியை தாண்டி வசூல் செய்தது. இரண்டாவது வாரத்திலும் விறுவிறுப்பான வசூல் செய்து தற்போது சுமார் 65 கோடி வசூல் செய்து விட்டதாகவும் மிக விரைவில் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் திரையரங்கு ஓனர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், தினமும் வசூலை குவித்து வரும் திருச்சிற்றம்பலம் தற்போது தனுஷின் மற்றுமொரு பிளாக் பஸ்டர் அசுரன் திரைப்படத்தின் ஒட்டுமொத்த ஷேரை முந்தியுள்ளதாம். இன்னும் சில தினங்களில் கர்ணன் படத்தின் தமிழ்நாடு ஷேரையும் முந்தவுள்ளது என கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

Dhanush, Nithya Menen, Priya Bhavani Shankar, Raashi Khanna, Thiruchitrambalam, Watch Online, தனுஷ், திருச்சிற்றம்பலம்,
adbanner