ஒரே அபார்ட்மெண்டில் வீடு வாங்கிய கோலிவுட் பிரபலங்கள்

நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள சொகுசு பங்களாவில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார் என்பது தெரிந்ததே. அதே நேரத்தில் அவருடைய அலுவகம் அடையாறில் உள்ள வீட்டில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சென்னையின் முக்கிய பகுதியில் கட்டப்பட்டிருக்கும் அப்பார்ட்மென்டில் சொகுசு வீடு ஒன்றை விஜய் வாங்கி இருப்பதாகவும் அதன் மதிப்பு ரூபாய் 35 கோடி என்றும் கூறப்படுகிறது. தற்போது அடையாறில் இயங்கி வரும் விஜய்யின் அலுவலகம் புதிதாக வாங்கியிருக்கும் இந்த சொகுசு வீட்டிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த அபார்ட்மெண்டில் ஏற்கனவே நடிகர் ஆர்யா ஒரு வீட்டை வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரே அப்பார்ட்மெண்டில் விஜய் மற்றும் ஆர்யா ஆகிய இருவருமே சொகுசு வீடுகளை வாங்கி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் மிக வேகமாக பரவி வருகிறது என்பது கூறிப்பிடத்தக்கது.

மேலும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தில்ராஜூ தயாரிப்பில் உருவாகி வரும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார் என்பதும், இந்த படத்திற்கு அவருடைய சம்பளம் ரூ.110 கோடி என்றும் குறிப்பிடத்தக்கது.

Arya, Vijay, 28th of August 2022
adbanner