ஆர்யாவின் ‘கேப்டன்’ படத்தின் புதிய மாஸ் அப்டேட்

‘கேப்டன்’ திரைப்படம் ஆர்யா நடிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகிறது. படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 8 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இப் படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடும். அந்த வகையில் சென்சார் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ‘கேப்டன்’ படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ‘யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் ஒரு மணிநேரம் 56 நிமிடங்கள் அதாவது 116 நிமிடங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது திரைப்படங்கள் இரண்டரை மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை ரன்னிங் டைம் இருக்கும் நிலையில் இந்தப் படம் ஹாலிவுட் பட பாணியில் இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாக உள்ளது.மேலும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதால் இந்த படம் மீண்டும் ஆர்யா- சக்தி சௌந்தரராஜன் கூட்டணியில் உருவாகும் வெற்றிப் படமாக எதிர்பாக்கப்படுகிறது.

மேலும் ஆர்யா ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். யுவா ஒளிப்பதிவில், பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Arya, Captain, 28th of August 2022