வசூலில் சாதனை படைக்கும் தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’

தனுஷ் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் முதல் நாளே கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக திரையரங்குகளுக்கு குடும்பம் குடும்பமாக சென்று படம் பார்த்து வருகின்றனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு குடும்பத்துடன் தியேட்டருக்கு படம் பார்க்க வரும் கூட்டம் அதிகமாக உள்ளது.

‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் முதல் வாரத்தில் 50 கோடியை தாண்டி வசூல் செய்தது. இரண்டாவது வாரத்திலும் விறுவிறுப்பான வசூல் செய்து தற்போது சுமார் 65 கோடி வசூல் செய்து விட்டதாகவும் மிக விரைவில் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் திரையரங்கு ஓனர்கள் தெரிவிக்கின்றனர்.

Dhanush, Nithya Menen, Thiruchitrambalam, , 28th of August 2022

இந்த படத்தின் முதல் வார மற்றும் இரண்டாவது வாரத்தில் மூன்று நாள் வசூல் நிலவரங்களை தற்போது பார்ப்போம்.
முதல் வார வசூல்: ரூ.51.42 கோடி
இரண்டாவது வாரம்:
முதல் நாள்: ரூ.3.47 கோடி
இரண்டாவது நாள்: ரூ. 4.61 கோடி
மூன்றாவது நாள்: ரூ.5.22 கோடி

மொத்த வசூல்: ரூ.64.72 கோடி