‘கோப்ரா’ படத்தின் தணிக்கை சான்றிதழ் மற்றும் ரன்னிங் டைம்!

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான ‘கோப்ரா’ திரைப்படம் வரும் 31ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் இந்த படத்தை வெளியிட உள்ளதால், இந்த படத்திற்கு மிகப் பெரிய அளவில் புரமோஷன் பணிகள் நடைபெறுகின்றன.

Vikram, Cobra 28th of August 2022

“கோப்ரா” படத்தின் ரன்னிங் டைம் தகவலில் ஒரு சுவாரஸ்யம் இருப்பதாக தகவல் வந்துள்ளது. அந்த வகையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் 3:3:3: எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் மற்றும் 3 வினாடிகள் என தகவல் வெளியாகியுள்ளன. அத்துடன் படத்துக்கு ‘யூஏ’ சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது.

மேலும் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், கேஎஸ் ரவிக்குமார், ஆனந்தராஜ், ரோபோ சங்கர், மியா ஜார்ஜ், மிருணாளினி ரவி உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படம் ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவில் புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.