கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெறாத நிலையில் தற்போது லைகா நிறுவனம் தயாரித்து வந்த இந்த படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதை அடுத்து தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி கடந்த வாரம் ஈசிஆர் சாலையில் பாபிசிம்ஹா மற்றும் ஜெயப்பிரகாஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் இந்த வாரம் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ரகுல் பிரீத் சிங் சென்னை வந்துள்ளார்.

மேலும் ’இந்தியன் 2’ படப்பிடிப்பிற்காக இந்த வாரம் காஜல் அகர்வாலும் மும்பையில் இருந்து சென்னைக்கு வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் அடுத்த வாரம் அமெரிக்காவிலிருந்து கமல்ஹாசன் சென்னை திரும்பியதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கலந்துகொள்ள உள்ளதால் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது.
