சூரி, விஜய் சேதுபதி நடித்த படம் ஓடிடியிலையே ரிலீஸ் – ரசிகர்கள் அதிர்ச்சி

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ’விடுதலை’ படம் ஓடிடியில் நேரடியாக ரிலீசாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இப் படத்திற்காக சூரி தனது உழைப்பை இரண்டு வருடம் கொட்டி உள்ளார் என்பதும் அவரை பெரிய திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கும் நிலையில் திடீரென இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்த படத்தின் முதல் பாகத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நிலையில் கௌதம் மேனன் மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோர் இரண்டாம் பாகத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Soori, Vetrimaaran, Viduthalai, Vijay Sethupathi, 28th of August 2022