‘பிசாசு 2’ ஆண்ட்ரியாவின் நிர்வாணக் காட்சிகளை நீக்கிய மிஷ்கின் – காரணம் வெளியானது!

’பிசாசு 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவு கட்டத்தில் உள்ளன. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது என்றும் இயக்குனர் மிஷ்கின் கூறியுள்ளார் .

இயக்குனர் மிஷ்கின் இப் படத்தில் ஆண்ட்ரியா நிர்வாண காட்சிகள் இடம்பெற்று இருந்ததாகவும் அதன் பின்னர் அந்த காட்சியை நீக்கி விட்டதாகவும் செய்திகள் வெளியானது. அத்துடன் நிர்வாணக் காட்சிகள் குறித்து விளக்கமளித்துள்ளார்.

’பிசாசு 2’ படத்திற்காக நிர்வாணக் காட்சிகளை எனக்கும் ஆண்ட்ரியாவுக்கு பொதுவான நண்பரான புகைப்படக்கலைஞர் தான் அந்த புகைப்படங்களை எடுத்தார் என்றும் நான் கூட அந்த புகைப்படங்களை பார்க்கவில்லை என்றும் புகைப்படங்களை மட்டும் தான் எடுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மிஷ்கின் விளக்கமாளிக்கையில் இப் படத்தில் நிர்வாணக் காட்சிகள் படத்தில் இடம் பெற்றால் தணிக்கையில் ‘ஏ’ சான்றிதழ் தருவார்கள், அதனால் குழந்தைகள் பார்க்க முடியாது என்பதால் அந்த காட்சியை நீக்கி விட்டேன் குழந்தைகளும் பார்க்க வேண்டும் என்று எதிர்பாக்கிறேன்.

Andera Jeremiah, Pisasu 2, 28th of August 2022
adbanner