சினிமாவில் களமிறங்கும் இன்னொரு குக் வித் கோமாளி பிரபலம்

“குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வருடங்களாக கோமாளியாக வந்து பார்வையாளர்களின் மனதை கவர்ந்தவர் சுனிதா. மேலும் அவருடைய கொஞ்சலான தமிழ் பேச்சு மற்றும் காமெடி ரசிக்கும் வகையில் இருப்பதால் அவர் பார்வையாளர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

Cooku with Comali 3, Sunitha, 27th of August 2022

அந்த வகையில் ’குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகர் சந்தோஷ் பிரதாப் உடன் ஜோடி சேர்ந்த போதெல்லாம் தனது ரொமான்ஸை வெளிப்படுத்துவார் என்பதும் அவை பார்ப்பதற்கு ரசிக்கும் வகையில் இருந்தது என்பது சொல்லத்தக்கது.

மேலும் சந்தோஷ் பிரதாப் உடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக கூறியுள்ள சுனிதா அது குறித்த வீடியோ ஒன்றையும் பதிவு இட்டுள்ளார். இது வெறும் டிரைலர் தான் என்றாலும் விரைவில் இந்த படத்தின் அறிவிப்பு வெளிவரும் என்றும் அவர் கூறியிருப்பது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிற்து.

adbanner