ஆன்ட்டி என்று யாராவது அழைத்தால் அவர்கள் மீது போலீசில் புகார் செய்வேன் – நடிகையின் அதிரடி அறிவிப்பு

நடிகை அனுசுயா தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக அறிமுகமாகி அதன் பின் நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் . இவர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ என்ற படத்தில் வில்லியாக நடித்த நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் தற்போது நடித்து கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான ’லைகர்’ திரைப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவதை தொடர்ந்து தனது பங்குக்கு நடிகை அனுசுயா அந்த படத்தை விமர்சனம் கூறியுள்ளார் . இதனால் விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் 37 வயதாகும் அவரை திட்டியதோடு ஆன்ட்டி என்று கூறி சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வரும் நிலையிலும் தன்னை ஆன்ட்டி என்று யாராவது அழைத்தால் அவர்கள் மீது போலீசில் புகார் செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.

தன்னை ஆன்ட்டி என்று விமர்சனம் செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்து வந்த அனுசுயா ஒரு கட்டத்தில் கோபமாகி தன்னை ஆன்ட்டி என்று விமர்சிப்பவர்கள் மீது போலீஸில் புகார் கொடுப்பேன் என்று எச்சரிக்கை விட்டுள்ளார். மேலும் தனக்கு 37 வயது தான் ஆகிறது என்றும் 25 வயதுக்கு மேல் உள்ளவர்கள் எல்லாம் எப்படி என்னை ஆன்ட்டி என்று கூறலாம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இருப்பினும் தொடர்ச்சியாக இன்னும் அவரை ஆன்ட்டி என்று விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் அழைத்து கிண்டல் செய்து வருகின்றனர்.

Anasuya, Pushpa 2, Pushpa, 27th of August 2022