மருத்துவமனையில் இருந்து பாரதிராஜா வெளியிட்ட அறிக்கை

இயக்குனர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்து அதன்பின் சமீபத்தில் அவர் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு இருந்தார். என்ற ஏற்கனவே செய்திகள் குறிப்பிடப்பட்டது. தற்போது இமயம் பாரதிராஜா உடல்நலம் தேறி வருவதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து பாரதிராஜா ஒரு அறிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

“நான் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா பேசுகிறேன். நான் உடல்நலக்குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் சிறப்பான சிகிச்சை காரணமாக நலம் பெற்று வருகிறேன்.

மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் என்னை நேரில் காண வர வேண்டாம் என்று என் மேல் அன்பு கொண்ட அனைவரையும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் பூரண நலம் பெற்று உங்கள் அனைவரையும் நேரில் பார்க்கின்றேன். அத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்தவுடன் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் இணையதளம் மூலமும் அன்புடன் விசாரித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என பதிவு தெறிவித்துள்ளார்.

Bharathiraja, 27th of August 2022
adbanner