விக்ரமின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குநர் இவர்தான்?

விக்ரம் நடித்த ‘கோப்ரா’ திரைப்படம் வரும் 31ம் தேதி வெளியாக உள்ளது. அதே போல் அவர் நடித்த மற்றொரு திரைப்படமான ’பொன்னியின் செல்வன்’ அடுத்த மாதம் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த ’துருவ நட்சத்திரம்’ திரைப்படம் விரைவில் வெளியாகும்.

மேலும் பா ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விக்ரம், சமந்தா முக்கிய வேடத்தில் நடித்திருந்த’யூ டர்ன்’ படத்தை இயக்கிய இயக்குனர் பவன் குமார் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படம் தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்திருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் பவன்குமார் தற்போது பகத்பாசில் நடித்து வரும் படத்தை இயக்கி வரும் நிலையில் இப்படத்தை முடித்தவுடன் அவர் விக்ரம் படத்தை இயக்குவார் என்று எதிர்பாக்கப்படுகிறது.

Vikram, Pawan Kumar, 27th of August 2022