முடிவை மாற்றி, நண்பனுக்காக இறங்கி வந்த நடிகர் சந்தானம்!

ரஜினிகாந்த் அஜித் படங்களில் நடிக்க அழைப்பு வந்தும், அவற்றை மறுத்து நடிகர் சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். தற்போது பிரபல நடிகரும், சந்தானத்தின் நண்பருமான ஆர்யாவுக்காக மீண்டும் காமெடியனாக நடிக்க தயார் என்று அவர் கூறியிருப்பது திரை வட்டாரங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவர் ஆர்யா நடித்த ’கேப்டன்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சந்தானம் கலந்துகொண்டார். அதில் பேசிய சந்தானம் தனக்கும் ஆர்யாவுக்கும் உள்ள நட்பு குறித்தும் , தாங்கள் இருவரும் சேர்ந்து நடித்த பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இயக்குனர் எம் ராஜேஷ், ‘பாஸ் என்ற பாஸ்கரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதாக இருந்தால் அந்த படத்தில் மீண்டும் காமெடியனாக நடிக்க தயார் என்றும் சந்தானம் தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு ஆர்யாவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Arya, Santhanam, 27th of August 2022
adbanner