ரஜினிகாந்த்தின் ’தலைவர் 170’ படத்தை இயக்கப்போகும் இளம் இயக்குனர்?

சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சமீபத்தில் உருவான ’டான்’ என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் சிபிசக்கரவர்த்தி. அதனை அடுத்து இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

’டான்’ திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் தற்போது ’ஜெயிலர்’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை முடித்தவுடன் சிபிசக்கரவர்த்தி இயக்கும் அடுத்தபடம் ரஜினிகாந்த் நடிக்கும் ’தலைவர் 170’ என்று சொல்லப் படுகிறது. இதனை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் மேலும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Rajinikanth,Thalaivar 170, Sibi Chakravarthy, 27th of August 2022