விமர்சனங்களை தாண்டி அமீர்கான் பட வசூலை முந்திய ‘லைகர்’ பட வசூல்?

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த ‘லைகர்’ என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது.

அதில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே நடித்து இருக்கிறார். லைகர் படத்தை பார்த்த ரசிகர்கள் பெரும்பாலும் நெகட்டிவ் விமர்சனத்தை தான் கொடுத்து வருகின்றனர்.

Ananya panday, Coffee With Karan, Kushi, Liger, Rashmika Mandanna, Varisu, Vijay Deverakonda, லைகர், விஜய் தேவரகொண்டா

இந்நிலையில் விமர்சனங்களை தாண்டி, நேற்று வெளியான முதல் நாளில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ’லைகர்’ திரைப்படம் 10 கோடி ரூபாயும், வட மாநிலங்களில் 5.50 கோடி ரூபாயும் தமிழகத்தில் 3 கோடி ரூபாயும் வெளிநாட்டில் 1.50 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளது. மொத்தத்தில் இந்த படம் நேற்று முதல் நாளில் 20 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

அமீர்கானின் ’லால் சிங் சத்தா’ முதல் நாளில் உலகம் முழுவதும் 15 கோடி மட்டுமே வசூல் செய்துள்ள நிலையில் தெலுங்கு திரைப்படம் ஒன்று 20 கோடி வசூலாகியுள்ளது பாசிட்டிவ்வாக பார்க்கப்படுகிறது.