பா ரஞ்சித் படத்திற்கு சென்சார் அதிகாரிகள் வைத்த ஆப்பு?

இயக்குனர் பா. ரஞ்சித் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, தற்போது நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். வழக்கமான தன் தொழில் நுட்பக்கலைஞர்கள் இல்லாமல் நிறைய புதுமுகக் கலைஞர்களோடு இந்த படத்தில் பணியாற்றி வருகிறார்.

இப் படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா போன்றோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு தென்மா இசையமைக்கிறார். வழக்கமாக ரஞ்சித் படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பேசப்படும். இந்த முறை நட்சத்திரம் நகர்கிறது படம் முழுக்க முழுக்க காதலை பேச உள்ளதாக பா. ரஞ்சித் கூறியுள்ளார்.

இந்நிலையில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். படக்குழு ’யுஏ’ சான்றிதழை எதிர்பார்த்த நிலையில், ’ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதனை தொடர்ந்து ‘ஏ’ சான்றிதழை பெற்றுள்ளதை அடுத்து அப்படி என்னதான் அந்த படத்தில் இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

Natchathiram Nagargiradhu
adbanner