கவினின் ‘டாடா’ படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்!

நடிகர் கவின் ‘டாடா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் ஏற்கனவே அறிந்தது.

‘டாடா’ படத்தில் கவினுக்கு ஜோடியாக ‘பீஸ்ட்’ படத்தில் நடித்த அபர்ணா தாஸ் நடித்து வரும் நிலையில், கணேஷ் பாபு என்பவர் இந்த படத்தை இயக்கி வருகிறார். மேலும் ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ் உள்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் இன்னும் 5 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெற வேண்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் விரைவில் பணிகள் தொடங்கி இந்த ஆண்டு இறுதியில் திரையரங்கில் ’டாடா’ படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

bigg boss kavin dada photos