8டே நாட்களில் விருமன் திரைப்படம் செய்த மொத்த வசூலையும் முந்திய திருச்சிற்றம்பலம்!

மித்ரன் ஜவஹார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில், நித்யா மேனன், ப்ரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா போன்ற 3 நாயகிகள் உட்பட பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ் போன்றோர் நடித்துள்ள ‘திருச்சிற்றம்பலம்’ கடந்த வியாழக்கிழமை ரிலீஸ் ஆன நிலையில், நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சினிமா விமர்சகர்களும், ரசிகர்களும் படத்தை புகழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் வசூலில் பல கோடிகளை குவித்து வரும் திருச்சிற்றம்பலம் கடந்த 8 நாட்களில் சுமார் ரூ. 68 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இதன்முலம் தற்போது விருமன் திரைப்படத்தின் மொத்த வசூலையும் திருச்சிற்றம்பலம் மொத்தமாக முந்தியுள்ளது.
விருமன் (15 நாட்களில்) – 63 கோடிகள்
திருச்சிற்றம்பலம் (8 நாட்களில்) – 68 கோடிகள்

Thiruchitrambalam