ராஜுமுருகன் இயக்கும் திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் களமிறங்கும் கார்த்தி?

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் கார்த்தி நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை இயக்குனர் ராஜூமுருகன் இயக்கவுள்ளார். நடிகர் கார்த்தி ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான வேடங்களை ஏற்று நடித்து வரும் நிலையில், இந்த படத்தில் இதுவரை ஏற்றிராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் அவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் இயக்குனர் ராஜூ முருகன் ஏற்கனவே ‘குக்கூ’, ‘ஜோக்கர்’, ‘ஜிப்ஸி’ ஆகிய படங்களை இயக்கியவர் என்பது அறிந்ததே.இந்த நிலையில் இதுவரை இல்லாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் கார்த்தியை இந்த படத்தில் நடிக்க வைக்க அவர் திட்டமிட்டு உள்ளதாகவும் இதற்கான ஒத்திகை பயிற்சிகளில் கார்த்தி ஈடுபட்டு வருவதாகவும் படக்குழுவினர் கூறியுள்ளனர். இதில் கார்த்தி ஒரு சமூக போராளியாக களமிறங்கவுள்ளதாக தகல்வல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே மணிரத்தினம் இயக்கத்தில் தயாராகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் வந்தியத்தேவன் என்ற கேரக்டரில் நடித்து படக்குழுவினர்களின் பாராட்டை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version