24 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளை நெருங்கும் ‘கோப்ரா’ டிரைலர்

‘கோப்ரா’ திரைப்படம் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள இதனை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வரும் 31ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ளது. மேலும் டிரைலர் ரிலீஸ் ஆன பிறகு இந்த படத்தின் எதிர்பார்ப்பு எகிற வைத்துள்ளது.

இந்த படத்தின் டிரைலரில் விக்ரமின் விதவிதமான கெட்டப் மற்றும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் கவரும் வகையில் வெளியாகி உள்ளது. கமல்ஹாசனின் ’தசாவதாரம்’ படத்தை விட அதிகமான கெட்டப்புகளில் விக்ரம் இந்த படத்திற்காக போட்டு இருக்கிறார் என்பதும் அவரது ஒவ்வொரு கெட்டப்பும் மிகப்பெரிய ஆச்சரியத்தில் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இசைப்புயல் ஏஆர் ரகுமானின் பின்னணி இசை மற்றும் ஹரிஷ் கண்ணனின் கேமரா படத்தின் நன்றாக உள்ளது. மற்றும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், வெளிநாட்டு பிரமாண்ட காட்சிகள், சேசிங் காட்சிகள் ஆகியவை இந்த படத்தின் அமைந்துள்ளன.

‘கோப்ரா’ டிரைலர் இதுவரை 6 மில்லியன் பார்வைகளை கடந்துள்ள நிலையில், 24 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.