‘வாரிசு’ படப்பிடிப்பு தளத்தில் இருந்து பிரபலம் போட்ட ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரல்

விஜய் நடித்த ’மாஸ்டர்’ மற்றும் ‘பீஸ்ட்’ ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நடன இயக்குனராக பணிபுரிந்தவர் ஜானி மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ‘பீஸ்ட்’ படத்தில் இவரது நடன இயக்கத்தில் உருவான அரபிக்குத்து பாடல் மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் வரவேற்பு பெற்றது.

விஜய் நடித்த ’மாஸ்டர்’ மற்றும் ‘பீஸ்ட்’ படங்களை அடுத்து விஜய் நடித்துக்கொண்டிருக்கும் ’வாரிசு’ படத்திலும் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ’வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஜானி மாஸ்டர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படத்தில் இருந்த இந்த தகவல் உறுதியாகியுள்ளது . ’மாஸ்டர்’, ‘பீஸ்ட்’ படங்களை போலவே இந்த படத்திலும் பாடல்களை மிகப் பெரிய அளவில் ஹிட்டாக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Varisu, Vijay , 25th of August 2022

இந்த படத்தில் விஜய் ,ராஷ்மிகா மந்தனா ,பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு உள்பட பலர் நடிக்கின்றனர். தமன் இசையில் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண கே.எல் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது என்று தகவல் வந்துள்ளது.

adbanner