லைகர் படத்தில் அதிரடியாக சம்பளத்தை உயர்த்தி பெற்றுக்கொண்ட விஜய் தேவரகொண்டா?

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த ‘லைகர்’ என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது.

liger vijay devarakonda

அதில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே நடித்து இருக்கிறார். லைகர் படத்தை பார்த்த ரசிகர்கள் பெரும்பாலும் நெகட்டிவ் விமர்சனத்தை தான் கொடுத்து வருகின்றனர்.

லைகர் படத்திற்காக விஜய் தேவரகொண்டா அதிரடியாக சம்பளத்தை உயர்த்தி சுமார் 25 கோடி ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. முந்தைய படங்களை விட இது பல மடங்கு அதிகம் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த சில படங்கள் பெரிய வெற்றியும் பெறவில்லை என்றாலும் அவர் சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது.