கருணாஸ் நடித்த ‘ஆதார்’ திரைக்கு வரும் நாள்…

நடிகர் கருணாஸ் முக்கிய வேடத்தில் நடித்த ‘ஆதார்’ என்ற படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு கருணாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘ஆதார்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

ஒரு அப்பாவி போலீசில் சிக்கிக் கொண்டால் அவர் எந்த அளவுக்கு சிரமப்படுவார், கொடுமைப் படுத்தப்படுவார், அலைக்கழிக்கப்படுவார் என்பதை விளக்கும் கதை அம்சம் கொண்ட இப் படம் வரும் செப்டம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கருணாஸ், இனியா, ரித்விகா, உமா ரியாஸ் உள்பட பலர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கின்றனர். ராம்நாத் பழனிகுமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையில் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் ராமர் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.