சிறப்பு பயிற்சிகள் பெற்றுவரும் கீர்த்தி சுரேஷ்?

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் ’மாமன்னன்’ உட்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். அந்த நிலையில் சமீபத்தில் ஆண்டனி பரத்வாஜ் என்பவர் இயக்க இருப்பதாகவும், ஹோம் மீடியா மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், ஜெயம் ரவி நடிக்கும் இருக்கும் திரைப்படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் செல்வராகவன் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கிய ’சாணிக்காகிதம்’ என்ற படத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் கேரக்டரில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது இந்த படத்தில் மீண்டும் போலீஸ் கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப் படத்தின் படப்பிடிப்பு வரும் 29ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ள கீர்த்தி சுரேஷுக்கு போலீஸ் கேரக்டருக்கு சிறப்பு பயிற்சிகளும் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மற்றும் ஏனைய தகவல்கள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும்.

Jayam Ravi, Keerthy Suresh, 24th of August 2022