மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்த ‘பிசாசு 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி விக்ரமின் ’கோப்ரா’ திரைப்படம் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது என்பதும் இந்த படத்திற்கு ஏராளமான தியேட்டர்கள் புக் ஆகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் ‘பிசாசு 2’ திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு வாரமே உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் எதுவும் செய்யப்படாமல் இருக்கிறது.
இந்த நிலையில் ‘பிசாசு 2’ படத்திற்கு போதிய தியேட்டர் கிடைக்காததால் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கப்பட்ட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அனேகமாக இந்த படம் செப்டம்பர் 9ஆம் தேதி ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ‘பிசாசு 2’ படத்தில் இடம்பெற்ற ‘நெஞ்சை கேளு’ என்ற பாடல் வரும் 25ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
