ப்ளீஸ் என்னை அப்படி கூப்பிடாதீங்க – ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்த நித்யாமேனன்

மித்ரன் ஜவஹார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில், நித்யா மேனன், ப்ரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா போன்ற 3 நாயகிகள் உட்பட பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ் போன்றோர் நடித்துள்ள ‘திருச்சிற்றம்பலம்’ கடந்த வியாழக்கிழமை ரிலீஸ் ஆன நிலையில், நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சினிமா விமர்சகர்களும், ரசிகர்களும் படத்தை புகழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் வசூலில் பல கோடிகளை குவித்து வரும் திருச்சிற்றம்பலம் கடந்த 6 நாட்களில் சுமார் ரூ. 65 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன், ராசி கன்னா, பிரியா பவானி சங்கர் என மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தனர். இதில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது சோபனா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நித்யா மேனன் தான்.

Dhanush, Nithya Menen, Priya Bhavani Shankar, Raashi Khanna, Thiruchitrambalam 24th august

அவருடைய இயல்பான சிரிப்பு மற்றும் நடிப்பின் காரணமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் சிங்கிளாக தாய்க்கிழவி பாடல் வெளியானது.

அந்தப் பாடல் தனுஷ் நித்யா மேனனுக்காக பாடியிருப்பார். இதனால் பல்வேறு ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் நித்யா மேனனை செல்லமாக தாய்க் கிழவி என்று அழைத்து வருகிறார்கள். இது பிடிக்காத நித்யாமேனன் ப்ளீஸ் என்ன அப்படி கூப்பிடாதீங்க என ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.