அட்டகாசமாக தொடங்கிய சூர்யா 42 ஷூட்டிங் குறித்து சூர்யா போட்ட பதிவு

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருக்கிறது என்ற செய்தி கடந்த சில மாதங்களாக வெளிவந்து கொண்டிருந்தன.

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்க உள்ளார். ‘சிங்கம்’ படத்திற்கு பிறகு மீண்டும் தேவிஸ்ரீபிரசாத் சூர்யாவின் படத்தில் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இப்படத்திற்கான பூஜை கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. தற்போது இது குறித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர் ‘படப்பிடிப்பு தொடங்குவதற்கு உங்கள் அனைவரின் ஆசிகளும் தேவை’ எனக் குறிப்பிட்டு இப்படத்தின் பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பதிவிட்டிருக்கிறார்.