6 நாட்கள் முடிவில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் செய்துள்ள மெகா வசூல்!

மித்ரன் ஜவஹார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில், நித்யா மேனன், ப்ரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா போன்ற 3 நாயகிகள் உட்பட பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ் போன்றோர் நடித்துள்ள ‘திருச்சிற்றம்பலம்’ கடந்த வியாழக்கிழமை ரிலீஸ் ஆன நிலையில், நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சினிமா விமர்சகர்களும், ரசிகர்களும் படத்தை புகழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் வசூலில் பல கோடிகளை குவித்து வரும் திருச்சிற்றம்பலம் கடந்த 6 நாட்களில் சுமார் ரூ. 65 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

மேலும் இதே நிலை தொடர்ந்தால் கண்டிப்பாக இந்த வார இறுதிக்குள் ரூ. 80 கோடியை எட்டும் என்று கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

Dhanush, Nithya Menen, Priya Bhavani Shankar, Raashi Khanna, Thiruchitrambalam, Thiruchitrambalam Box Office Collection