தளபதி 67 ல் எப்படி திரிஷா, பின்னணியில் நடந்தது என்ன – வெளிவந்த தகவல்?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 67’ இரண்டு நாயகிகள் நடிக்க இருப்பதாகவும் சமந்தா மற்றும் த்ரிஷா ஆகியோர்கள் தான் அந்த இருவர் என்றும் ஏற்கனவே செய்திகள் வெளியானது.

தற்போது 14 ஆண்டுகளுக்கு பின் விஜய்யுடன் இணைந்து திரிஷா நடிக்கப்போவதாக ஏறக்குறைய உறுதியான தகவல் வெளிவந்துள்ளது. கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி படங்களை தொடர்ந்து தளபதி 67ல் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை திரிஷா பெற்றுள்ளார்.

இந்நிலையில் , இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை விஜய்க்கு அழுத்தம்/ கோரிக்கை கொடுத்து திரிஷா பெற்றுள்ளாராம் என்கிற தகவல் கோடம்பாக்கத்தில் வெளிவந்துள்ளது. அப்போது தான் தனக்கு மீண்டும் முன்பு போல் மார்க்கெட் உயரும் என்று எண்ணி விஜய்யிடம் இந்த வாய்ப்பை கேட்டுள்ளாராம்.

இதனால் தான் தளபதி 67ல் நடிக்கும் வாய்ப்பை நடிகை திரிஷாவிற்கு விஜய் கொடுத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version