விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆட்டம் போட்ட விஜய் தேவரகொண்டா வீடியோ மீண்டும் வைரல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டும் அல்லாது பாக்ஸ் ஆபீஸ் கலக்சனின் சாதனை நாயகனாக வலம் வருபவர் தளபதி விஜய். ரஜினிக்கு அடுத்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை செய்துவருவது இவரது படங்கள் தான்.

அதே போல் விஜய் தேவரகொண்டா சினிமாவில் நுழைந்த சில காலங்களிலேயே இந்திய மக்களால் கொண்டாடப்படும் நடிகராக மாறிவிட்டார். இப்போது அவர் லிகர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

பல மொழிகளில் வெளியாகப்போகும் இப்படத்தின் புரொமோஷனுக்காக படக்குழு நிறைய இடங்களுக்கு சென்று வருகிறார்கள். ஒரு நடன நிகழ்ச்சிக்கு விஜய் தேவரகொண்டா சென்றுள்ளார். அங்கு விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது.