தனுஷால் பொன்னியின் செல்வனுக்கு வந்த சிக்கல்?

தமிழ் சினிமாவில், கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை பல ஆண்டுகளாக இயக்குனர்கள், நடிகர்கள் என பலரும் முயற்சி செய்தனர். இதில், இயக்குனர் மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வனை இயக்கி வருகிறார். இப்படத்தை லைக்கா தயாரித்துள்ளது.

மேலும் இப்படத்தில், விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். ஏ.ஆர். இசையமைத்துள்ள இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் வசூலுக்கு சிக்கல் உண்டாகும் நிலை கோடம்பாக்கத்தில் உருவாகியுள்ளது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, பொன்னியின் செல்வன் படம் வெளியாகும் அதே நாளில் தனுஷ், செல்வராகவனின் நானே வருவேன் திரைப்படம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், கண்டிப்பாக பொன்னியின் செல்வன் படத்தின் வசூலுக்கு பின்னடைவு ஏற்படும் என தெரிவிக்கின்றனர் சினிமா விமர்சகர்கள்.

இதனால் பொன்னியின் செல்வன் படக்குழு தனுசுடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி தனுஷின் படத்தை பிறிதொரு நாளில் வெளியிட கோரிக்கைவிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ponniyin selvan lates 23 08 2022
adbanner