முத்திரை பதிக்க போகும் ஜெயிலர் படம் எது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படம் ஜெயிலர், நெல்சன் திலீப்குமார் இயக்கக்கும் இப்படத்த்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிக்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகக் தெரிவிக்கபடுகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இணையதள வாசிகள் ஜெயிலர் என்ற தலைப்பில் இதற்கு முன் வெளியான திரைப்படங்களின் போஸ்டர்ஸை இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

அதில் மலையாளத்தில் Jailer என்ற தலைப்பில் ஒரு திரைப்படம் வெளியாக இருக்கிறது. மேலும் ஒரு வெளிநாட்டை சேர்ந்த திரைப்படமும் இதேபோல் Jailer என்ற தலைப்பில் உருவாகி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் முத்திரை பதிக்க போகும் ஜெயிலர் எது என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

jailer new updates 22 08 2022
adbanner