அதிதி ஷங்கர் புதிய படங்கள் இணையத்தில் வைரல் 23 ஆகஸ்ட் 2022

Aditi Shankar 23–08–2022

Aditi Shankar – 23rd August 2022 – தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் கார்த்தி நடிப்பில், முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விருமன்’. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி நடித்துள்ளார். இவர்களுடன் கருணாஸ், சூரி, ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ் போன்ற முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

நடிகர் சூர்யா தயரித்துள்ள இப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று வெளியாகியது. சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது.

மேலும் ‘விருமன்’ படம் திரைக்கு வரும் முன்பே அதிதி , சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அவர் தனது புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இவர் பதிவிட்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.