10 மொழிகளில் வெளிவரவிருக்கும் சூர்யா படம்?

’சூர்யா 42’ திரைப்படம் சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடிப்பில், உருவாக இருக்கிறது. இப் படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. அந்த வகையில் இந்த படத்தின் மேலும் சில தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சூர்யா 42 திரைப்படம் ஒரு பான் – இந்தியா திரைப்படமாக உருவாகும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. ’சூர்யா 42’ திரைப்படம் 10 மொழிகளில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படத்தின் மோஷன் போஸ்டர் அடுத்த வாரம் வெளியாக இருப்பதாகவும் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் 10 நாட்கள் நடைபெற இருப்பதாகவும் அதன் பிறகு படக்குழுவினர் கோவா செல்ல இருப்பதாகவும் அங்கு 25 நாட்கள் படப்பிடிப்பை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

’சூர்யா 42’ படத்தில் சூர்யா ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார் என்பதும், ஞானவேல்ராஜா இந்த படத்தை தயாரிக்க உள்ளார்.

Suriya, Suriya 42, Siruththai Siva, 22nd of August 2022