நடிகர் விஜய் சேதுபதியை தொடர்ந்து ஜவான் படத்தில் இணைந்த பிரபல நடிகை!

இயக்குநர் அட்லி பிகில் திரைப்படத்தை தொடர்ந்து ஷாருக் கானின் ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் பல நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டு இருக்கிறது.

மேலும் ஷாருக் கானுடன் இப்படத்தில் நயன்தாரா, அனிருத், யோகி பாபு உள்ளிட்ட முக்கிய தமிழ் நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக சமீபத்தில் தான் அளித்திருந்த பேட்டியில் கூறினார். இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதியை தொடர்ந்து இப்படத்தில் நடிகை தீபிகா படுகோண் நடிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. தற்போது நடிகை தீபிகா படுகோண் சென்னையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi, Jawan, Atlee, Deepika Padukone 22nd of August 2022