வெளியான சில நிமிடங்களில் டிரெண்ட் ஆகி வரும் ‘ஜெயிலர்’ போஸ்டர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தின் மாஸ் அப்டேட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும், நெல்சன் இயக்கத்தில் உருவாக்கவுள்ள படத்துக்கு ‘ஜெயிலர்’ என்று டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து வெளியான போஸ்டர் இணையத்தில் கவனம் ஈர்த்து வந்தது. அந்த போஸ்டரில் ரத்தம் சொட்ட, கத்தி ஒன்று தூங்குவதுபோல் வெளியாகியிருந்தது.

Rajinikanth, Jailer 22-Aug-2022

மேலும் இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது. அதுபோல யோகி பாபுவும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அட்டகாசமான ஸ்டில் ஒன்றை வெளியிட்டு இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம் என அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் வெளியாகி சில நிமிடங்களில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.