இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை விதித்த நீதிமன்றம்! பரபரப்பாகும் செய்தி

இயக்குனர் லிங்குசாமிக்கு சிறை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

பிரபல இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதகால சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Lingusamy 22-Aug-2022

பிரபல தயாரிப்பு நிறுவனமான பிவிபி தொடர்ந்த செக் மோசடி வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்க்கு தொடர்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இயக்குனர் லிங்குசாமிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தமிழ் திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் இயக்கத்தில் சமீபத்தில் ‘தி வாரியர்’ வெளியாகியிருந்தது என்பதும் ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.