தனுஷ் – ஐஸ்வர்யாவை சேர்த்து வைத்த மகன் யாத்ரா! வைரலாகும் புகைப்படம்

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இணைந்திருக்கும் இணையத்தை புரட்டிப்போட்டும் புகைப்படம்!

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் சட்டப்படி பிரிவதாக சமீபத்தில் அறிவித்த நிலையில் மீண்டும் இருவரையும் அவர்களது மகன் யாத்ரா மூலம் இணைந்துள்ளதாக தகவல் வைரலாகி வருகிறது.

Dhanush, Aishwarya 22-Aug-2022

தனுஷ் – ஐஸ்வர்யா இருவரின் மகன் யாத்ரா படிக்கும் பள்ளியில் இன்று நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு துறையின் கேப்டனாக தனுஷ் மகன் யாத்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளன.

இது குறித்த தகவலை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்த நிலையில், இன்றைய திங்கட்கிழமை இதனை மகிழ்ச்சியுடன் பதிவு செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது மகனின் பள்ளிக்கு சென்ற ஐஸ்வர்யா இந்த நிகழ்ச்சியை பார்த்து மகிழ்ந்துள்ளார். அதுமட்டுமன்றி இன்று தனுஷூம் இந்த விழாவுக்கு வந்துள்ளதை அடுத்து தனுஷ் – ஐஸ்வர்யா மற்றும் அவர்களது மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோரை ஒரே புகைப்படத்தில் காணக்கூடியதாகவுள்ளது.

இந்த புகைப்படத்தில் விஜய் ஜேசுதாஸின் குடும்பத்தினரையும் காணக்கூடியதாக உள்ளது. இந்த புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவிற்கு பின்னர் மீண்டும் இணைந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.