சிம்பு படத்தின் பிரமாண்டமான ஆடியோ லான்ச்!
கௌதம் மேனன் இயக்கத்தில், சிம்பு நடித்துள்ள படம் ‘வெந்து தணிந்தது காடு’ என்பதும் இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பதும் தெரிந்ததே. ‘விண்ணை தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ போன்ற படங்களை தொடர்ந்து கௌதம் மேனன் – சிம்பு – ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி மூன்றாவது முறையாக உருவாகும் படமாக ‘வெந்து தணிந்தது காடு’ அமைந்துள்ளது.

இந்த படத்தின் ‘மறக்குமா நெஞ்சம்’ உள்ளிட்ட 2 பாடல்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து அடுத்த படியாக படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா விமர்சையாக நடைபெற உள்ளது.
அந்தவகையில் செப்டம்பர் 2ஆம் தேதி வேல்ஸ் யுனிவர்சிட்டியில் நடைபெற உள்ள இந்த இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிற்காக ரூபா 3 கோடி செலவில் 6000 இருக்கைகளுடன் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு வருகிறது. கோலிவுட் சினிமாவிலேயே மிக பிரம்மாண்டமான ஆடியோ வெளியீட்டு விழாவாக இது அமையும் என கூறப்படுகிறது.
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.