ஆர்யாவின் ‘கேப்டன்’ திகிலுடன் கூடிய அதிரடியான டிரைலர்!

ஆர்யா நடித்த ‘கேப்டன்’ திரைப்படத்தின் இணையத்தில் வெளியான டிரைலர்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் ஆர்யா நடிப்பில், சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கேப்டன்’ திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Arya, Captain 22-Aug-2022

ஆர்யாக்கு ஜோடியாக ஐஸ்வர்ய லட்சுமி நடித்துள்ள இப்படத்துக்கு டி. இமான் இசையமைத்துள்ளார். ‘கேப்டன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகிய நிலையில், இந்த டிரைலரில் அதிரடியுடன் கூடிய திகில் கலந்த ஆக்ஷன் காட்சிகள் நிறைந்திருப்பதால் இந்தப் படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யுவா ஒளிப்பதிவில் பிரதீப் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தின் ரிலீஸ் உரிமத்தை கையில் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.