‘புஷ்பா 2’ படத்தின் முக்கிய அறிவிப்பை கொடுத்த தயாரிப்பு நிறுவனம்! ரசிகர்கள் உற்சாகம்

‘புஷ்பா 2’ படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்!

தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பு மாபெரும் வெற்றி பெற்றதோடு வசூலையும் அள்ளிக் குவித்தது. குறிப்பாக பாலிவுட்டில் இந்த படத்தின் வெற்றி பெரிய அளவில் பேசப்பட்டது.

Allu Arjun, Pushpa The Rule 22-Aug-2022 001

இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகமான ‘புஷ்பா தி ரூல்’ உருவாக உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில், ‘புஷ்பா 2’ கதைக்களம் வெளிநாடுகளில் நடப்பது போல உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

புஷ்பா சர்வதேச சந்தையை பிடிக்க முயலும்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கூறுவதே இரண்டாம் பாகம் என கூறப்படுகிறது. இதற்காக ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் படப்பிடிப்புகள் நடத்த உள்ளதாகவும், இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இந்நிலையில் இன்று படத்தின் பூஜை ஆரம்பித்துள்ளதாக படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Allu Arjun, Pushpa The Rule 22-Aug-2022