அருண்விஜய்யின் அடுத்த பட ரிலீஸ் தேதி!

அருண்விஜய், பாலக் லால்வானி, காளி வெங்கட், வெங்கடேஷ், மறுமலர்ச்சி பாரதி உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள ’சினம்’ திரைப்படத்தை ஜிஎனார் குமரவேலன் என்பவர் இயக்கியுள்ளார். இத் திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவான ’யானை’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் அருண் விஜய் நடித்த ’தமிழ் ராக்கர்ஸ்’ என்ற வெப்தொடரும் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடலாம்.

Arun vijay, Sinam, 21st of August 2022

மேலும் ’சினம்’ திரைப்படம் ஷபீர் இசையமைத்துள்ளார். கோபிநாத் ஒளிப்பதிவில் ராஜாமுகமது படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்தில் அருண் விஜய் போலீஸ் கேரக்டரில் நடித்து கலக்கி உள்ளார்.மேலும் அருண் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி 22 ஆகஸ்ட் மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளார்