கார்த்தி ‘விக்ரம்’ படத்தில் நடிக்காதது ஏன்?

‘விக்ரம்’ திரைப்படம் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் மற்றும் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதுகுறிப்படத்தக்கது. மேலும் இந்த படம் சுமார் 500 கோடி ரூபாய் வரை திரையரங்குகளில் வசூல் செய்தது. இந்த நிலையில் பிரபல நடிகர் கார்த்தியும் நடிப்பதாக இருந்தது ஆனால் ஒரு சில காரணங்களால் நடிக்கவில்லை.

மேலும் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் கார்த்தி இதுகுறித்து கூறியபோது ‘விக்ரம்’ படத்தில் டெல்லி ரோலில் சில காட்சிகள் நடிக்க லோகேஷ் கனகராஜ் கேட்டதாகவும் ஆனால் அப்போது ’பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் நீண்ட தலைமுடியுடன் இருந்ததால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை என்றும் அதனால் தான் குரல் மட்டும் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் ‘விக்ரம்’ படத்தில் சூர்யா, ரோலக்ஸ் கேரக்டரில் ஐந்து நிமிடங்கள் நடித்திருந்தது மிகப்பெரிய பரபரப்பை போல் கார்த்தியும் நடித்து இருந்தால் மிகப் பெரிய வரவேற்பு பெற்று இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் லோகேஷ் இயக்கத்தில் ‘கைதி 2’ படத்தின் படப்பிடிப்பு 2023 ஆம் ஆண்டில் தொடங்க இருப்பதாகவும் அதில் கார்த்தி ரோலக்ஸ் கேரக்டர் தான் நடிக்க இருப்பதாகவும் உறுதி கூறியுள்ளார்.

Kaithi 2, Karthi, vikram, Kamal Haasan, 21st of August 2022
adbanner