அல்லு அர்ஜுன் ட்விட்டரில் சாதனை – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.

பிரபல முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கில் அதிக ரசிகர்களை பெற்று ஸ்டைலிஷ் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுவார். இவர் புஷ்பா என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார். தற்போது இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக இருக்கிறது.

மேலும் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்க படக்குழு திட்டமிட்டு உள்ளது. இப்படத்தில் கூடுதலாக ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் , இந்திய மொழிகள் மட்டுமின்றி உலகின் பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு மொத்தம் 10 மொழிகளில் இப்படத்தை வெளியிட படக்குழு கூறியுள்ளது.

ட்விட்டரில் தெலுங்கு நடிகர்களின் பட்டியலில் 7 மில்லியன் அதிக அளவில் பின்தொடர்பாளர்களை வைத்திருக்கும் அல்லு அர்ஜுன் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார். இதுக்காக அவர் தனது twitter பக்கத்தில் அனைவருக்கும் நன்றி கூறி பதிவிட்டிருக்கிறார்.

Exit mobile version